கஞ்சா வைத்திருந்த ஒடிசா வாலிபர் கைது

X
வெள்ளகோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் ஓலப்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மீனாட்சிபுரம் அருகில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டு இருந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்தார். விசாரணையில் ஒடிசா மாநிலம் பத்ராக் மாவட்டம் பதாம் மிஸ்பூரைச் சேர்ந்த மனோஜ் பரிடா (வயது 21) என்பதும் தற்போது ஓலப்பாளையத்தில் வேலை செய்து வருவதும், அவரிடம் 50 கிராம் கஞ்சா இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Next Story

