ராமநாதபுரம் அதிமுக ஆலோசனைக் கூட்டம்

எடப்பாடி பழனிச்சாமி பிரசார பயணம்அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
ராமநாதபுரம் மாவட்டம் எடப்பாடி பழனிச்சாமி பிரசார பயணம் அதிமுக ஆலோசனை கூட்டம் மக்களை மீட்போம் தமிழகத்தை காப்போம் பிரசார பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிச்சாமி ஜூலை 30 ல் பரமக்குடி, திருவாடானை (ஆர் எஸ் மங்கலம்), ஜூலை 31 ல் ராமநாதபுரம், முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிகளில் உரை ஆற்ற உள்ளார். எடப்பாடி பழனிச்சாமிக்கு வரவேற்பளிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் ராமநாதபுரம் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் தேவிபட்டினத்தில் நடந்தது. வடக்கு ஒன்றிய செயலாளர் கோட்டைச்சாமி தலைமை வகித்தார். கலைப்பிரிவு மாவட்ட செயலாளர் ராமநாதன் வரவேற்றார். எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் ஆனிமுத்து, மாணவரணி மாநில துணை செயலாளர் செந்தில்குமார், சேமிப்பு கிடங்கு வாரிய முன்னாள் தலைவர் முனியசாமி ஆகியோர் ஆலோசனை வழங்கினர். இதில் பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story