ஜேசிபி மீது தனியார் சொகுசு பேருந்து மோதி சாலையில் கவிழ்ந்து விபத்து

ஜேசிபி மீது தனியார் சொகுசு பேருந்து மோதி சாலையில் கவிழ்ந்து விபத்து
X
ஜேசிபி மீது தனியார் சொகுசு பேருந்து மோதி சாலையில் கவிழ்ந்து விபத்து
மதுராந்தகம் அருகே ஜேசிபி மீது தனியார் சொகுசு பேருந்து மோதி சாலையில் கவிழ்ந்து விபத்து சொகுசு பேருந்தில் பயணம் செய்த 12 பயணிகள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற தனியார் சொகுசு பேருந்து சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த அய்யனார் கோவில் என்ற இடத்தில் சாலையைக் கடப்பதற்காக நின்று கொண்டிருந்த ஜேசிபியின் முன்பக்கத்தில் தனியார் சொகுசுப் பேருந்து மோதி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தனியார் சொகுசுப் பேருந்தில் பயணம் செய்த 12 பயணிகள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். விபத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மதுராந்தகம் போலீசார் லேசான காயங்கள் அடைந்த பயணிகளை மீட்டு மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story