விவசாய நிலத்தில் எலிக்காக வைக்கப்பட்ட மின் கம்பியில் மாட்டி தொழிலாளி உயிரிழப்பு,இருவர் கைது
சூனாம்பேடு அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற கூலி தொழிலாளி தவறி விழுந்த போது விவசாய நிலத்தில் எலிக்காக வைக்கப்பட்ட மின்சாரத்தில் மாட்டி உயிரிழப்பு இருவர் கைது செங்கல்பட்டு மாவட்டம், சூனாம்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்ன களக்காடி மாரியம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் செல்லப்பன்( வயது 48) இவர் வீடு கட்டுவதற்கான சென்ட்ரிங் கூலி வேலை செய்து வருகிறார். போந்தூர் கிராமத்தில் வேலை செய்துவிட்டு மாலை பணி முடிந்து மீண்டும் அவருடைய வீட்டுக்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது தென்னேரிப்பட்டு கிராமத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுகின்ற போது சாலையின் ஓரமாக உள்ள ஒரு விவசாய நிலத்தில் விழுந்தார். செல்லப்பன் அந்த விவசாய நிலத்தில் பாம்பு எலி தொல்லைக்காக மின்சாரக் கம்பி திருட்டுதனமாக வைத்துள்ளனர்.அந்த கம்பியில் விழுந்த செல்லப்பன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். சம்பவ இடத்திற்கு சென்ற சூனாம்பேடு போலீசார் இறந்து கிடந்த செல்லப்பன் உடலை மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருட்டுத்தனமாக விவசாய நிலத்தில் மின்சாரம் வைத்த இரண்டு கழனியின் உரிமையாளர் தென்னேரிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த நாகமணி( வயது 55) மற்றும் நடராஜன் (வயது 59 )ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story



