மலையம்பாளையம் அருகே டிராக்டர் மீது லாரி மோதி விபத்து. ஒருவர் படுகாயம்

மலையம்பாளையம் அருகே டிராக்டர் மீது லாரி மோதி விபத்து. ஒருவர் படுகாயம்
மலையம்பாளையம் அருகே டிராக்டர் மீது லாரி மோதி விபத்து. ஒருவர் படுகாயம். கரூர் மாவட்டம், மன்மங்கலம் தாலுக்கா , மேல சக்கர பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி வயது 51. இவர் ஜூலை 16ஆம் தேதி அதிகாலை 5:30-மணி அளவில் கரூர் - சேலம் சாலையில் அவரது டிராக்டரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அதே சாலையில் மதுரை மாவட்டம் , உசிலம்பட்டி , கட்ட கருப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆதிசிவன் வயது 40 என்பவர் வேகமாக ஓட்டி வந்த லாரி பழனிச்சாமி ஓட்டிச் சென்ற டிராக்டரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பழனிசாமிக்கு தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால் உடனடியாக அவரை கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக பழனிச்சாமி அளித்த புகாரில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் லாரியை வேகமாகவும் , அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய ஆதி சிவன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.
Next Story