காமேஸ்வரம் மீனவர்களுக்கு தனியாக அங்காடி அமைத்து தர வலியுறுத்தி
100 நாள் வேலையை உடனடியாக வழங்க வலியுறுத்தியும். தண்ணீர் பந்தல் முதல் கடற்கரை வரை உள்ள சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டியும். திருப்பூண்டி கிழக்கு காமேஸ்வரத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தர வேண்டியும், திருப்பூண்டி கிழக்கு காமேஸ்வரம் மீனவர்கள் இருக்கும் பகுதிக்கு தனியாக அங்காடி அமைத்து வேண்டியும், திருப்பூண்டி கிழக்கு காமேஸ்வரத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி தொடங்க வேண்டியும், திருப்பூண்டி கிழக்கு ஊராட்சி என்பதை மாற்றி காமேஸ்வரம் ஊராட்சி என்று பெயர் மாற்றி தர வலியுறுத்தியும், நாகை மாவட்டம் காமேஸ்வரம் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு முன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு, கிளை செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மாரிமுத்து, ஒன்றிய செயலாளர் அப்துல் அஜீஸ் ஆகியோர் முன்னிலை வைத்தனர். இதில், ஒன்றிய குழு உறுப்பினர்கள் சேகர், உமாநாத், அன்புராஜ் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். காமேஸ்வரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர் சேகர், கூட்டுறவு சார் பதிவாளர் மாரிராஜ் ஆகியோர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன்பேரில் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது.
Next Story



