மாரியம்மன் கோவில் திருவிழா கொண்டாட்டம்

பாலக்கோடு தொகுதி மூக்கம்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாடி ஊராட்சி, மூக்கம்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா தற்போது வெகு விமரிசையாக நடைபெற்றது. மேலும் இத்திருவிழாவில் கரகம் எடுத்து முக்கிய வீதிகளில் ஊர்வலம் கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில் இன்று ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் மற்றும் கூழ் ஊற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story