ராமநாதபுரம் விவசாய குறைதீர்க்கும் கூட்டத்திலிருந்து விவசாயிகள் வெளிநடப்பு

ராமநாதபுரம் விவசாய குறைதீர்க்கும் கூட்டத்திலிருந்து விவசாயிகள் வெளிநடப்பு
X
பருவம் தவறி பெய்த பெய்த மழையால் பாதிக்கப்பட்ட நெல் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்காததை கண்டித்து விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு பரபரப்பு ஏற்பட்டது
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பருவம் தவறி பெய்த கன மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகை கடந்த ஓராண்டு காலமாக வழங்காததால் விவசாயிகள் பல்வேறு விதமான போராட்டங்களில் ஈடுபட்டனர் அதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தமிழ்நாடு வைகை பாசன விவசாய சங்கத்தின் தலைவர் பாக்கியநாதன் தலைமையில் விவசாயிகள் கூட்டத்திலிருந்து வெளியிடப்பு செய்து ஆட்சித் தலைவர் முன்னிலையில் கண்டன முழக்கமிட்டவாரு கூட்டத்தில் இருந்து வெளியிடப்பு செய்தனர் இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது கடந்த ஓராண்டு காலமாக விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்காததால் விவசாயிகள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர் இதனை கண்டித்து விவசாயிகள் குறைவிற்கும் கூட்டத்தில் வெளிநடப்பு செய்துள்ளோம் இனிமேலும் உரிய இழப்பீடு தொகை வழங்கவில்லை என்றால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து விவசாயிகளையும் ஒன்று திரட்டி கஞ்சி தொட்டி காய்ச்சும் போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் எச்சரிக்கை விடுத்தனர்
Next Story