கோவை: இழப்பீடு விவகாரம் - அரசு பஸ் ஜப்தி!

கோவை: இழப்பீடு விவகாரம் - அரசு பஸ் ஜப்தி!
X
பணிநீக்கம் தவறானது என பஸ் டிரைவர் மாடசாமிக்கு நீதிகொடுத்த கோர்ட்.
தென்காசியைச் சேர்ந்த மாடசாமி என்பவர், 1995ல் அரசு பஸ் டிரைவராக பணியில் சேர்ந்தார். 2005ல், அவர் சமர்ப்பித்த சான்றிதழ் போலி எனக் கூறி பணி நீக்கம் செய்யப்பட்டது. பின்னர் தொழிலாளர் கோர்ட்டும், ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் அவரின் சான்றிதழ் உண்மையானது எனத் தீர்ப்பு வழங்கின. அதனைத் தொடர்ந்து, ரூ.67 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. இதில் ரூ.57 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டதால், மீதமுள்ள ரூ.11 லட்சம் பெற கோர்ட்டில் மாடசாமி மனு தாக்கல் செய்தார். பாக்கி தொகையை வழங்கத் தவறியதால், தொழிலாளர் கோர்ட்டு உத்தரவின்படி நேற்று கோவையில் இயக்கத்தில் இருந்த அரசு பஸ்ஸொன்று (எண் 70) ஜப்தி செய்யப்பட்டது. இதனால் கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story