புத்துமாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளி முதல் நாளான இன்று அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்.

X
புத்துமாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளி முதல் நாளான இன்று அம்மனுக்கு சிறப்பு அலங்காரம். நீண்ட வரிசையில் நின்று ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புத்துகோவிலில் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ புத்துமாரியம்மன் கோவிலில் உள்ளன இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான திருத்தளத்தில் வெள்ளிக்கிழமை செவ்வாய் கிழமை ஆகிய இரண்டு நாட்கள் பல்வேறு கிராமப் பகுதியில் இருந்தும் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து வழிபாடு செய்து செல்வது வழக்கம். இந்நிலையில் இன்று ஆடி வெள்ளி முதல் நாள் என்பதால் வெளி மாநிலம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கிராமப் பகுதியில் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர். அம்மனுக்கு பொங்கலிட்டு அதனுடைய பிரசாதத்தை படையல் இட்டு வழிபாடு செய்தனர். மேலும் அருகில் இருக்கக்கூடிய நாகாளம்மன் மீது பால், முட்டை ஆகியவற்றை வைத்து பெண்கள் வழிபாடு செய்தனர். மேலும் அங்கு பக்தர்களுக்கு தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..
Next Story

