மழைநீர் கால்வாய் இல்லாததால் சிறு மழைக்கே சகதியான சாலை

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேரூராட்சி, 8வது வார்டில் என்.ஜி.ஒ., நகர் உள்ளது. இங்குள்ள சாலை வழியாக வெள்ளேரியம்மன் கோவில் மற்றும் கிதிரிப்பேட்டை பகுதி மக்கள் வாலாஜாபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், இச்சாலையையொட்டிய ரயில்வே தடம் அருகிலான பக்கவாட்டு பகுதிகளில் சமீபத்தில் மண் அணைத்து சமப்படுத்தப்பட்டு வருகிறது.இதனால், ரயில்வே தடம் அருகாமையிலான பகுதிகள் மேடாகி மழை நேரங்களில் என்.ஜி.ஒ., நகர் சாலையில் மழைநீர் வழிந்து தேக்கமாகிறது. இதனால், அச்சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சேற்றில் சிக்கி சிரமப்படுகின்றனர். இரவு நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, வாலஜாபாத் என்.ஜி.ஒ., நகர் சாலையில், மழைநீர் வடிகால்வாய் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

