பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் சென்று பார்வையிட்ட ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்.

பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் சென்று பார்வையிட்ட ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்.
X
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி, இராசிபுரம் நகராட்சி , சேந்தமங்கலம் பேரூராட்சி மற்றும் வெண்ணந்தூர் ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் நகராட்சி, சேந்தமங்கலம் பேரூராட்சி மற்றும் வெண்ணந்தூர் ஒன்றியப் பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் சேந்தமங்கலம் பேரூராட்சியில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.30.00 இலட்சம் மதிப்பீட்டில் பூங்கா அமைக்கும் பணியினையும், சேந்தமங்கலத்தில் குளம் தூர்வாரும் பணி முடிக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இராசிபுரம் நகராட்சி, அனைப்பாளையம் பகுதியில் 6 தளங்களுடன் ரூ.53.39 கோடி மதிப்பீட்டில் பாத சிகிச்சை, எக்ஸ்-ரே, ஆய்வகம், ஸ்கேன் அறை, புற நோயாளிகள் பிரிவு, விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு, முடவியல், கண், பல், காது, குழந்தை மருத்துவம், அவசர கால மகப்பேறு குழந்தை பராமரிப்பு, பிரசவ அறை, இருதய கண்காணிப்பு, ஆண், பெண் பொது மருத்துவம், பிரேத பிரிசோதனை கூடம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுடன், 250 படுக்கைகள் கொண்ட பல்வேறு சிறப்பு பிரிவுகளை உள்ளடக்கிய அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை புதிதாக கட்டப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து, இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் மருத்துவமனை கட்டுமானப்பணிகளை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இராசிபுரம் நகராட்சி, அணைப்பாளையத்தில் ரூ.10.58 கோடி மதிப்பீட்டில் நகர புதிய பேருந்து நிலையமானது பேருந்து நிறுத்துமிடம், உணவு விடுதிகள், இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் நிறுத்துமிடம், தாய்மார்கள் பாலூட்டும் அறை உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் பேருந்து நிலைய கட்டுமானப்பணிகளை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு ஒப்பந்த காலத்திற்குள் பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம் நடுப்பட்டி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.13.30 இலட்சம் மதிப்பீட்டில் நியாய விலைக்கடை கட்டப்பட்டு வருவதையும், அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமானப் பணிகளையும் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், ஓ சௌதாபுரம் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு, சமையற்கூடத்தினை பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து, நடுப்பட்டி ஊராட்சி அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்டு, மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவின் தரத்தினை ருசித்து பார்த்து, ஆய்வு மேற்கொண்டார்.
Next Story