ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு மாங்கல்ய கயிறு அலங்காரம் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்..

ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு  மாங்கல்ய கயிறு அலங்காரம் ஏராளமான பக்தர்கள்  நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்..
X
ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு மாங்கல்ய கயிறு அலங்காரம் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு முக்கிய விசேஷ தினங்கள் மற்றும் அமாவாசை, பௌர்ணமி , ஆடி மாதம் ஆகிய நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வழிபாடு செய்து வருகின்றனர். அதன்படி இன்று ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் ஆன பால், தயிர்,மஞ்சள் சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் போன்ற வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று பின்னர் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாங்கல்ய கயிறு மூலம் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. இந்த அலங்காரத்தில் அம்மனை தரிசனம் செய்தால் மாங்கல்ய பாக்கியம் ஏற்படும், மற்றும் திருமணம் கைகூடும், மங்களகரமான வாழ்வு அமையும் என ஐதீகம் இதனைத் தொடர்ந்து ராசிபுரம் சுற்றுவட்டார பகுதியான பட்டணம், புதுப்பாளையம், வடுகம், புதுப்பட்டி, நாமகிரிப்பேட்டை, மெட்டாலா மற்றும் பல்வேறு மாவட்டங்களான சேலம் , நாமக்கல், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் மாங்கல்ய கயிறு, பிரசாதங்கள், அன்னதானம் போன்றவை வழங்கி சிறப்பித்தனர். இந்த சிறப்பு அலங்காரத்தை திருக்கோவில் அர்ச்சகர்கள் தியாகராஜன், மணிகண்டன் சிறப்பாக செய்திருந்தனர்.
Next Story