நெஞ்சு வலியால் பெண் உயிரிழப்பு.

நெஞ்சு வலியால் பெண் உயிரிழப்பு.
X
மதுரை அருகே நெஞ்சு வலியால் பெண்மணி உயிரிழந்தார்.
மதுரை அருகே கோவில் பாப்பாக்குடி வசந்த நகர் 1வது குறுக்குத் தெருவில் வசிக்கும் ரகுநாதன் என்பவரின் மனைவி யமுனா (32) என்பவர் நேற்று (ஜூலை.17) காலை 10:30 மணியளவில் வீட்டிற்கு அருகே உள்ள ராமகிருஷ்ண பலசரக்கடையில் பொருட்களை வாங்க சென்றார். அங்கு திடீரென்று நெஞ்சு வலியுடன் கீழே மயங்கி விழுந்தார். உடனே அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து அவரது கணவர் ரகுநாதன் அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் . போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story