தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

X
. தஞ்சாவூர், மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் வளாகம் மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கத்தில் 19.07.2025 சனிக்கிழமை அன்று காலை 11.30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அனைத்து துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்வார்கள். எனவே தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களது தேவைகளை கோரிக்கை மனுவாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் வழங்கி பயன்பெறலாம் என தஞ்சாவூர் மாவட்டஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
Next Story

