உதகையில் பள்ளிக்கு செல்லும் சாலையில் குப்பைக் கழிவுகள் வீசி செல்வதாலும் திறந்தவெளி கழிப்பிடமாகவும் மாறி வருவதால் சுகாதார சீர்கேடு...
உதகையில் பள்ளிக்கு செல்லும் சாலையில் குப்பைக் கழிவுகள் வீசி செல்வதாலும் திறந்தவெளி கழிப்பிடமாகவும் மாறி வருவதால் சுகாதார சீர்கேடு... பலமுறை நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் சுத்தம் செய்த பள்ளி மாணவர்கள் ... நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சிக்கு உட்பட்ட வண்டிசோலை பகுதியில் அமைந்துள்ளது oxford பள்ளி இந்த பள்ளியை ஒட்டிய இடத்தில் திறந்தவெளியில் குப்பை கழிவுகள் வீசி செல்வதாலும். திறந்த வெளி கழிப்பிடமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு கொட்டப்படும் குப்பை கழிவுகளால் மாணவர்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகம் சார்பில் உதகை நகராட்சிக்கு பல முறை புகார் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பள்ளி நிர்வாகம் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். மாணவர்களின் நலன் கருதி அப்பள்ளியில் பயிலும் நாட்டு நல திட்ட பணி மாணவர்கள், மற்றும் ஆசிரியர்கள் பள்ளியில் பணிபுரியும் ஊழியர்கள் அந்த பகுதி முழுவதையும் சீரமைத்தனர். மேலும் நகராட்சி நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டு அப்பகுதியில் குப்பை கழிவுகள் கொட்டுபவர்களை கண்டறிந்து அபராதம் விதிக்க வேண்டும் எனவும் பள்ளியின் சாலையை ஆசீர் அமைத்து தர வேண்டும் என பள்ளி நிர்வாகம் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story



