ஶ்ரீ ராஜ காளியம்மன் கோவிலில் எடப்பாடி கே.பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக வேண்டி திருவிளக்கு பூஜை.

X
Rasipuram King 24x7 |18 July 2025 8:26 PM ISTஶ்ரீ ராஜ காளியம்மன் கோவிலில் எடப்பாடி கே.பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக வேண்டி திருவிளக்கு பூஜை.
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அடுத்த சீராப்பள்ளியில் சங்கமேடு ஸ்ரீ ராஜ காளியம்மன் கோவிலில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி கே.பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக வேண்டி எடப்பாடியார் பேரவை சீராப்பள்ளி பேரூர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பூஜையையொட்டி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜையும் நடந்தது. அதனை தொடர்ந்து திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு வழிபாடு நடத்தினர். முடிவில் பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதியை சோந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். பூஜைகளை சர்வ சக்தி பீடம் தேஜா அம்மாள் ஏற்பாடுகளை செய்து இருந்தார். இந் நிகழ்ச்சியில் முன்னாள் சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் சி. சந்திரசேகரன், முன்னாள் பேரூர் கழகச் செயலாளர் நாகச்சந்திரன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி ஒன்றிய நெசவாளர் அணி செயலாளர் அருணாச்சலம், முன்னாள் பேரூர் கழகச் இலக்கிய அணி 8 வது வார்டு செயலாளர் இளங்கோ, வார்டு செயலாளர்கள் துரைசாமி, முத்துசாமி, பாலசுப்பிரமணியம், ரவிக்கமல், மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பூஜையில் கலந்து கொண்ட மகளிருக்கு புடைவைகள் மற்றும் திருநங்கைகளுக்கும் புடைவைகளை முன்னாள் சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் சி. சந்திரசேகரன் வழங்கினார். இறுதியாக அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story
