விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா தலைமையில் நடைபெற்றது.

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா  தலைமையில் நடைபெற்றது.
X
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா தலைமையில் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா தலைமையில் நடைபெற்றது.    இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் தெரிவித்துக் கொண்டனர். மாவட்ட ஆட்சியர் அவர்கள் விவசாயிகளின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து உரிய விளக்கம் அளித்து தொடர் நடவடிக்கை எடுக்க தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.            மேலும், கடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளால் வழங்கப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வேளாண்மை துணை இயக்குநர்/மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவ) அவர்களால் எடுத்துரைக்கப்பட்டது. கோட்டாட்சியர் தலைமையில் மாதாந்தோறும் கோட்ட அளவில் நடைபெறும் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும் தவறாது கலந்து கொண்டு விவசாயிகளின் மனுக்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட  ஆட்சியர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.           வனவிலங்குகளால் பயிர் சேதம் அதிகஅளவில் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறும், நிவாரணத்திற்கு நடவடிக்கை எடுத்து இழப்பீடு உடனடியாக வழங்கவும் துணை இயக்குநர், மேகமலை புலிகள் காப்பகம், திருவில்லிபுத்தூர் அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுத்தினார்.       வனவிலங்குகளை கட்டுப்படுத்த மாவட்ட அளவில் மற்றும் கிராம அளவில் கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், சிப்காட் தொழிற் பூங்காவிற்கு கோவிலாங்குளம், வேளாண் அறிவியல் நிலையம் நிலம் கையகப்படுத்துவது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று மேல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.   மேலும், பருத்திக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பருத்தி காட்டன் கார்ப்பரேசன் ஆப் இந்தியா என்ற நிறுவனத்தில் கொள்முதல் செய்தவற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேளாண்மை துணை இயக்குநர்(வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை) அவர்களுக்கு அறிவுத்தப்பட்டுள்ளது.           கால்நடைகளுக்கு காப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு மண்டல இணை இயக்குநர், கால்நடை பராமரிப்புத்துறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுத்தினார்.             மேலும், தென்னை பயிருக்கு  காப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு தோட்டக்கலை துணை இயக்குநர் அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுத்தினார்.            சேதம் அடைந்துள்ள உலர்களங்களை சீரமைத்திட நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விவசாயிகளின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து உரிய விளக்கம் அளித்து தொடர் நடவடிக்கை எடுத்து மனுதாரருக்கு தெரிவிக்குமாறு  தலைமை  அலுவலர்களுக்கு அறிவுத்தப்பட்டது.           மானியத்தில்  டிராக்டர் வழங்கிட நடவடிக்கை  எடுக்குமாறு  செயற்பொறியாளர்  (வேளாண்  பொறியியல் துறை)  அவர்களுக்கு   மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் அறிவுத்தப்பட்டது.             சேத்தூரில் நிரந்தர  கொள்முதல்  நிலையம்  அமைய  நடவடிக்கை  எடுக்குமாறு  வருவாய் கோட்டாட்சியர், சிவகாசி அவர்களை  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.           கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி விரைவில் சீரமைத்திட நடவடிக்கை எடுக்குமாறு நீர்வளத்துறை, செயற்பொறியாளர்  மற்றும்  வட்டார  வளர்ச்சி  அலுவலர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.             கண்மாய்கள் மற்றும் நீர்வழித்தடங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்களை அகற்ற வரும்போது பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அரசு அலுவலர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுக் கொண்டார்.
Next Story