பெருந்தலைவர் காமராஜர் குறித்து அவதூறாக பேசிய பாஜகவினர் விருதுநகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்*

X
பெருந்தலைவர் காமராஜர் குறித்து அவதூறாக பேசிய பாஜகவினர் விருதுநகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை பெரம்பூரில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, காமராஜர் தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு என மாநிலம் முழுக்க கண்டனக் கூட்டம் நடத்தி வந்தார். ஆனால் காமராஜருக்கு ஏசி வசதி இல்லை என்றால் உடலில் அலர்ஜி ஏற்பட்டுவிடும் அதற்காக காமராஜர் தங்கும் அனைத்து பயணியர் உறுதிகளிலும் குளிர்சாதன வசதி செய்யச் சொல்லி அப்பொழுது முதல்வராக இருந்த கருணாநிதி உத்தரவிட்டார். அப்பொழுது திமுக அரசை எதிர்த்தது தான் காமராஜர் பேசுகிறார் . இருந்தாலும் காமராஜரின் உடல்நிலையை கருதி கருணாநிதி ஏசி வசதி ஏற்படுத்த சொன்னார். ஆகையால் காமராஜர் உயிர் பிரிவதற்கு முன்னால் கருணாநிதியின் கையைப் பிடித்துக் கொண்டு நீங்கள்தான் இந்த நாட்டையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டும் என்று கூறியதாக அவதூறு கருத்து பரப்பி பேசிய திருச்சி சிவாவை கண்டித்து, விருதுநகர் தேசபந்து மைதானத்தில் பாஜக கிழக்கு மாவட்டம் சார்பில் திருச்சி சிவாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் பென்டகன் ஜி பாண்டுரங்கன் தலைமையில் நடைபெற்றது இதில் 100க்கும் மேற்ப்பட்ட பாஜகவினர் கலந்து கொண்டு திருச்சி சிவாவை கண்டித்தும் திமுகவை கண்டித்தும் கோஷம் எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டபார்வையாளர் வெற்றிவேல் மாநில செயற் உறுப்பினர் கஜேந்திரன் பொதுக் குழு உறுப்பினர் சந்திரன் பிரச்சார பிரிவு மாவட்ட தலைவர் காமாட்சி , ஈஸ்வரன், மாவட்ட பொது செயலாளர் காளீஸ்வரி மாவட்ட செயற் குழு உறுப்பினர் சங்கரேஸ்வரி நகர தலைவர் மணிராஜ் இராமநாதபுரம் பாராளுமன்ற இணை பொறுப்பாளர்விஜய ரகுநாதன் மற்றும் மாநில மண்டல் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story

