அதிமுக ஆலோசனை கூட்டத்தில் ஏற்பட்ட கோஷ்டி மோதலால் பரபரப்பு.*

X
சாத்தூரில் நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்தில் ஏற்பட்ட கோஷ்டி மோதலால் பரபரப்பு. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தனியார் திருமண மண்டபத்தில் ஆகஸ்ட் 8ஆம் தேதி சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவர்க்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்க ஏற்பாடு குறித்து ஆலோசனை கூட்டம் விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிலையில் கிழக்கு மாவட்ட அதிமுகவில் மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் எம் எஸ் ஆர் ராஜவர்மன் மற்றும் சுப்பிரமணியன் ஆகியோர் ஒரு அணியாகவும் திருச்சுழி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே கே சிவசாமி மற்றும் சாத்தூர் ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி ஆகியோர் ஒரு அணியாகவும் இருந்து வருகின்றனர். இந்த நாளில் அருப்புக்கோட்டை தெற்கு ஒன்றிய செயலாளராக இருந்து வரும் யோகா வாசுதேவனுக்கும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவசாமிக்கும் மேடையில் வாக்குவாதம் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அருப்புக்கோட்டை உட்பட்ட பகுதிக்கு நான் சொந்த செலவில் அனைத்து வேலைகளும் செய்கிறேன், கண்டவன் எல்லாம் சீட்டு கேட்டு வருகின்றனர் என ஒருமையில் பேசியதால் கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
Next Story

