தார் மெசினில் துப்பட்டா சிக்கி இரண்டு மகன்களின் தாய் பலி

தார் மெசினில் துப்பட்டா சிக்கி இரண்டு மகன்களின்  தாய் பலி
X
குமாரபாளையத்தில் தார் மெசினில் துப்பட்டா சிக்கி இரண்டு மகன்களின் தாய் பலியானார்.
குமாரபாளையம் மாரக்காள்காடு பகுதியை சேர்ந்தவர் சத்யா, 34. இவர் அதே பகுதியில் உள்ள விசைத்தறி கூடத்தில் தார் மெசின் ஓட்டும் கூலி வேலை செய்து வருகிறார். இவரது கணவர் கோவிந்தராஜ், 40. கூலி. நேற்று மாலை 01:00 மணியளவில் தார் மெசின் ஓட்டிக்கொண்டிருந்த சத்யாவின் துப்பட்டா, மெசின் சக்கரத்தில் சிக்கி, கழுத்து இறுகி, சம்பவ இடத்தில் பலியானார். இவர்களுக்கு ஹரிஸ்ராஜ், 14, தருண்ராஜ், 6, ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story