சதுரகிரி கோயில் மலைப்பகுதியில் ஆடி அமாவாசை திருவிழாவிற்கு பக்தர்கள் அவசர தேவைக்கு அழைப்பதற்கு பிஎஸ்என்எல் டவர் அமைக்கும் பணி தீவிரம்....*

சதுரகிரி கோயில் மலைப்பகுதியில் ஆடி அமாவாசை திருவிழாவிற்கு பக்தர்கள்  அவசர தேவைக்கு அழைப்பதற்கு  பிஎஸ்என்எல் டவர் அமைக்கும் பணி தீவிரம்....*
X
சதுரகிரி கோயில் மலைப்பகுதியில் ஆடி அமாவாசை திருவிழாவிற்கு பக்தர்கள் அவசர தேவைக்கு அழைப்பதற்கு பிஎஸ்என்எல் டவர் அமைக்கும் பணி தீவிரம்....*
விருதுநகர் மாவட்டம் சதுரகிரி கோயில் மலைப்பகுதியில் ஆடி அமாவாசை திருவிழாவிற்கு பக்தர்கள் அவசர தேவைக்கு அழைப்பதற்கு பிஎஸ்என்எல் டவர் அமைக்கும் பணி தீவிரம்.... விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் .இந்த கோயிலானது கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் தற்பொழுதும் சித்தர்கள் வாழ்ந்து வழிபட்டு வருவதாக கூறப்படுவதால் இது சித்தர்களின் சொர்க்க பூமி எனவும் அழைக்கப்படுகிறது .மேலும் இந்த கோயிலுக்கு சென்றால் நினைத்த காரியங்கள் நடக்கும் என்பதால் தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். இந்த கோயிலுக்கு மாதந்தோறும் பிரதோஷம் அமாவாசை பௌர்ணமியை உள்ளிட்ட விசேஷ நாட்களில் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது தினந்தோறும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த கோயிலின் வருடம் தோறும் ஆடி அமாவாசை திருவிழா என்பது வெகு சிறப்பாக கொண்டாடப்படும் .இந்த திருவிழாவிற்கு பல்வேறு பகுதியில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இந்த ஆண்டிற்கான ஆடி அமாவாசை திருவிழா வரும் 22ஆம் தேதி துவங்குகிறது . 24ஆம் தேதி ஆடி அமாவாசை நடைபெற உள்ளது.இந்த நிலையில் ஆடி அமாவாசை திருவிழா பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மலைப்பகுதியில் கோயில் அமைந்துள்ளதால் தொலைத்தொடர்பு வசதி இல்லாததன் காரணமாக அவசர தேவைக்கு யாரையும்தொடர்பு கொள்ள முடியாத நிலை இருந்து வருகிறது.ஆனால் இந்த முறை ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி ஒரு வாரத்திற்கு பிஎஸ்என்எல் டவர் அமைக்கப்பட்டு தொலைத்தொடர்பு வசதி செய்து கொடுக்க கோயில் நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.இதனால் பக்தர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டாலோ வேறு ஏதும் பிரச்சினை என்றாலோ உடனே அதிகாரிகளை தொடர்பு கொண்டு எளிதில் அழைத்துச் செல்வதற்கு உதவியாக இருக்கும் என கோயில் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். தொலைத்தொடர்பு வசதி ஏற்படுத்துவதன் காரணமாக பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story