கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்  நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
X
கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டாரப் பகுதிகளில் நடைபெற்றுவரும் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 ஒன்றியங்களைச் சார்ந்த 1286 குடியிருப்புகள் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் கயத்தாறு ஒன்றியங்களைச் சார்ந்த 45 வழியோர குடியிருப்புகளுக்கான ரூ.1387.73 கோடி மதிப்பிலான கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ், சாத்தூர் வட்டம், உப்பத்தூரில் கீழ்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு, பணிகளின் முன்னேற்றம், அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர், சாத்தூர் நகராட்சி பிரதான சாலையோரத்தில் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கான குழாய்கள் பதிக்கப்பட்டு வரும் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து, சாத்தூர் வட்டம், சூரங்குடி கிராமத்தில் பட்டா வேண்டி விண்ணப்பம் செய்த விண்ணப்பதாரரின் வீட்டிற்கு நேரடியாக சென்று கள ஆய்வு மேற்கொண்டு உறுதி செய்து விண்ணப்பதாரருக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்குமாறு உரிய அலுவலர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, வழங்கினார்.
Next Story