ஸ்ரீவில்லிபுத்தூர் தமிழகத்தில் இனிவரும் காலங்களில் கூட்டணி ஆட்சி தான் அமையும் கிருஷ்ணசாமி பேட்டி.....

X
ஸ்ரீவில்லிபுத்தூர் தமிழகத்தில் இனிவரும் காலங்களில் கூட்டணி ஆட்சி தான் அமையும் கிருஷ்ணசாமி பேட்டி..... விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பொதுமக்களை சந்திக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புதிய உள்ள கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி பேசுகையில் தமிழகத்தில் இனிமேல் கூட்டணி ஆட்சி தான் அமையும் என்று கூறினார். வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு அரசியல் கட்சிகள் தங்களின் முதல் கட்ட பிரச்சாரங்களை துவங்கியுள்ளனர். இதன் அடிப்படையில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் புதிதமிழர் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி பொதுமக்களை சந்தித்து தங்கள் கட்சிக்கு ஆதரவு திரட்டி வருகிறார். அதன் அடிப்படையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இடையங்குளம் பகுதிக்கு வருகை தந்த புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி பொதுமக்களிடையே பேசினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி தற்போது பொது மக்களை சந்தித்து தான் ஆதரவு திரட்டி வருவதாகவும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணியை பொருத்தமட்டில் தமிழகத்தில் இருக்கின்ற இரு பெரும் கட்சிகள் மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்து தான் தேர்தலை சந்தித்து வருவதாகவும் அரசியல் கட்சிகள் அதிகமான எண்ணிக்கையில் இருக்கும் கூட்டணி தான் வெற்றி பெறும் என்ற நிலை கிடையாது என்றும் மேலும் தமிழகத்தில் முந்தைய காலங்களில் எப்படியோ ஆனால் வரும் காலங்களில் கூட்டணி ஆட்சிதான் அமைய வாய்ப்பு இருப்பதாக கூறினார்.
Next Story

