லாரிகள் இயங்காததால் நான்கு லட்சம் நெல் மூட்டைகள் தேக்கம்

வாடகையை உயர்த்த வலியுறுத்தி இரண்டு நாள் மன்னார்குடியில் லாரி உரிமையாளர் வேலைநிறுத்த போராட்டத்தின் காரணமாக லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாத நிலை விவசாயிகள் வேதனை
மன்னார்குடி வட்ட லாரி உரிமையாளர் சங்கத்தில் 800-க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் உள்ளனர். இவர்கள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல் மூட்டைகளை ஏற்றி இறக்கி வருகின்றனர். இதற்கான வாடகையை ஒப்பந்ததாரர்கள் ஆண்டுதோறும் ஜூலை மாதம் உயர்த்தி நிர்ணயிப்பது வழக்கமாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான வாடகையை இதுவரை உயர்த்தாமல் இருப்பதாக கூறி லாரி உரிமையாளர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தால் மன்னார்குடி அருகே கீழப்பாலம், மூன்றாம்சேத்தி, நான்காம் சேத்தி,நெம்மேலி, சோழபாண்டி, தலையாமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட சுமார் 4 லட்சம் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளது. மேலும் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய வந்த சுமார் 1.5 லட்சம் நெல் முட்டைகள் விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். மாலை நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நெல்மணிகள் மலையில் நனையும் அபாயம் ஏற்பட்டுள்ளது இதனால் ஈரப்பதம் அதிகரிப்பு காரணமாக நெல் மூட்டுகளை கொள்முதல் செய்ய முடியாத நிலை ஏற்படும் என விவசாயி வேதனை தெரிவிக்கின்றனர்.
Next Story