பா்கூா்:வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய தொழிலாளி கைது.

X
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரை அடுத்துள்ள ஜெகதேவி பகுதியை சோ்ந்த முருகன். இவருடைய இரண்டாவது மனைவி முனியலட்சுமிக்கும் (46) முருகனின் முதல் மனைவி மகன் முத்தரசனுக்கும் (33) சொத்து தகராறு இருந்ததாகக் கூறப்படுகிறது. முருகனுக்குச் சொந்தமான இடத்தில் உணவகத்தின் வாடகை பணத்தை முத்தரசனுக்கு தர முனியலட்சுமி மறுத்துள்ளார். இமனால் இரண்டு பேருக்கும் இடையே தகராறு வந்தள்ளது. இதில் ஆத்திரமடைந்த முத்தரசன், முனியலட்சுமி வீட்டின் மீது பெட்ரோல் குண்டை நேற்று முன்தினம் வீசியுள்ளார். இதில் வீட்டிலிருந்த பொருள்கள் சேதமடைந்தன. இதுகுறித்து முனியலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் பா்கூா் போலீசார் வழக்குப் பதிவு செய்து முத்தரசனைக் கைது செய்தனா்
Next Story

