ஓசூர் அருகே வடமாநில தொழிலாளி துக்கிட்டு தற்கொலை.

X
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் சுதம்தாபா (23) இவர் ஒசூர் சிப்காட் பேடரப்பள்ளி யில் தங்கி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் உதவியாளராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் இவர் ஒரு பெண்ணை அழைத்து வந்து ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணுக்கும், சுதம்தாபாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதா கூறப்படுகிறது. இதனால் அந்த பெண் கோபித்துக்கொண்டு சொந்த ஊருக்கு சென்று விட்டார். இதில் மனமுடைந்த சுதம்தாபா, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து வந்த ஒசூர் சிப்காட் போலீசார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Next Story

