தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய அரசுக்கு கோரிக்கை!

தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய அரசுக்கு கோரிக்கை!
X
தமிழகத்தில் நோய் பாதித்த மற்றும் நோய் தொற்றுக்களை பரப்பக்கூடிய தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய தமிழக அரசு அனுமதி கொடுக்க வேண்டும் என்று எம்பவர் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் நோய் பாதித்த மற்றும் நோய் தொற்றுக்களை பரப்பக்கூடிய தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய தமிழக அரசு அனுமதி கொடுக்க வேண்டும் என்று எம்பவர் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக எம்பவர் இந்தியா நுகர்வோர் & சுற்றுச்சூழல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவம் கௌரவ செயலாளர் ஆ. சங்கர் தமிழக முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில், "தமிழகத்தின் பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின்படி தமிழ்நாட்டில் 2022 ஆம் ஆண்டில் 3,65,318 நாய்க்கடிகளும், 2023 ம் ஆண்டில் 4,40,921 ஆக உயர்ந்துள்ளது. 2025 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் 1,24,000 நாய்க்கடி சம்பவங்கள் நடந்துள்ளது. நாய்க்கடிகளின் மூலமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 2017 ல் 16 ஆக இருந்தது. 2024 ல் 47 ஆக உயர்ந்துள்ளது. இதில் 4 வயதுக் குழந்தையும் அடங்கும். ஆகவே தெரு நாய்க்கடி சம்பவங்களால் ரேபிஸ் தொற்று அதிகரித்து வருவதால் கால்நடை மருத்துவர் சான்று பெற்று நோய் பாதித்த மற்றும் நோய் தொற்றுக்களை பரப்பக்கூடிய தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய உள்ளாட்சி அமைப்புகளுக்கு போர்க்கால அடிப்படையில் அதிகாரம் வழங்க தமிழக அரசு ஆணையிடுமாறு அன்புடன் வேண்டுகிறோம். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story