பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து உத்திரமேரூரில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

X
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து, மாவட்ட அ.தி.மு.க., சார்பில், நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலர் சோமசுந்தரம், மாநில அமைப்பு செயலர் கணேசன் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பேசியதாவது: உத்திரமேரூர் பேரூராட்சியில் குடிநீர் சரியாக விநியோகம் செய்யப்படுவதில்லை. ஆனால், சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தப்பட்டுள்ளது. இங்குள்ள அரசு மருத்துவமனையில் புதிய கட்டட கட்டுமான பணியில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கழிப்பறை வசதி இல்லாமல் மாணவியர் சிரமப்படுகின்றனர். உத்திரமேரூர் புறவழிச்சாலை பணிகள் மந்தமாக நடப்பதால், மக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். தொடர்ந்து, மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்யாத உத்திரமேரூர் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டிக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார். உத்திரமேரூர் நகர செயலர் ஜெயவிஷ்ணு உட்பட பலர் பங்கேற்றனர்.
Next Story

