கலெக்டர் பிரசாந்த் உத்தரவு

கலெக்டர் பிரசாந்த் உத்தரவு
X
உத்தரவு
பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் குடிநீர் கேன்கள் மூன்று மாதத்திற்கு ஒருமுறை புதியதாக மாற்ற வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டார். கள்ளக்குறிச்சி மாவட்ட அளவிலான உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில் உணவு பாதுகாப்பு துறையின் மூலம் கடைகளுக்கு உரிமம் வழங்குதல், உரிமங்களை புதுப்பித்தல், உரிமம் பெறாத கடைகளின் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுதல், குடிநீர் நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், உணவு மாதிரி பரிசோதனை செய்தல், மறுசுழற்சி செய்த எண்ணெய்களை சேகரித்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு அறிவுரை வழங்கப்பட்டது.
Next Story