விசைப்படகு மீனவர்கள் திடீரென வேலை நிறுத்தம்!

X
தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் 270 விசைப்படகுகள் கரையில் நிறுத்திவைப்பு : தொழிலாளர்களுக்கு இடையே பிரச்சனை காரணமாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடித் துறைமுகத்தில் விசைப்படகு மீனவர்கள் இன்று மீன் பிடிக்க செல்லவில்லை. விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்ததால் சுமார் 270 விசைப்படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் விசைப்படகு மீன்பிடித் துறைமுகத்தில் விசைப்படகு மீனவர்கள் தினமும் காலை 5 மணி முதல் மீன் பிடிக்க சென்று இரவு 9 மணிக்குள் மீன் பிடித்து திரும்ப வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி இன்று காலை 5 மணியில் வழக்கம் போல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு பிடிக்க ஆயத்த பணி மேற்கொண்டனர். அப்பொழுது ஒரு சில விசைப்படகுகள் தொழிலாளர்கள் இடையே சண்டை ஏற்பட்டது. இதன் காரணமாக மீனவர்கள் விசைப்பட மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்லவில்லை. தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் விசைப்படகு கடலுக்கு செல்லாத காரணத்தினால் இன்று நாள் மட்டும் பண பரிவர்த்தனை 1 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
Next Story

