தக்கோலம்: கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

X
தக்கோலம் போலீசார் குற்றசம்பவங்கள் தடுக்கும் வகையில் தக்கோலம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பக்குவம் காந்திநகர் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றி கொண்டிருந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.அதில் அவர் அதே பகுதியை சேர்ந்த சஞ்சீவி மகன் சண்முகம் (வயது 20) என்பதும் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
Next Story

