நெமிலி அருகே குடிசை வீடு எரிந்து நாசம்

நெமிலி அருகே குடிசை வீடு எரிந்து நாசம்
X
நெமிலி அருகே குடிசை வீடு எரிந்து நாசம்!
நெமிலியை அடுத்த கீழ்வீதி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயா (வயது 56). இவர், அதே பகுதியில் குடிசை வீட்டில் வசித்து வந்தார். நேற்று மாலை வீட்டில் சமையல் செய்தபோது, எதிர் பாராத விதமாக தீப்பிடித்ததில் குடிசை வீடு எரிந்தது. உடனடி யாக அவர் வீட்டில் இருந்து வெளியே ஓடி தப்பினார். இதுகுறித்து அவர்,அரக்கோணம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புப்படை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்தில் குடிசை வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானது. வீட்டில் இருந்த பொருட்களும் சேதமாகின. இதுகுறித்து நெமிலி போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகா ரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story