நெமிலியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

X
நெமிலியை அடுத்த அசநெல்லிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் வேலாயுதம். இவரது மகன் திவாகர் (வயது 23). இவர் ஐ.டி.ஐ படித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார்.கடந்த சில தினங்களாக குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடும் மன உளைச்சலில் இருந்து வந்த திவாகர் நேற்று பிற்பகல் காட்டுக்கண்டிகை பகுதியில் உள்ள அவரது மற்றொரு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த நெமிலி சப்-இன்ஸ்பெக்டர் நாராயணசாமி உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

