ஆற்காடு: சாலை மேம்பாட்டு பணிகளை அதிகாரிகள் ஆய்வு!

ஆற்காடு: சாலை மேம்பாட்டு பணிகளை அதிகாரிகள் ஆய்வு!
X
சாலை மேம்பாட்டு பணிகளை அதிகாரிகள் ஆய்வு!
ஆற்காட்டில் இருந்து திண்டிவனம் செல்லும் சாலை முதல்-அமைச்சர் சாலை மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் (2024-2025) சாலையை அகலப்படுத்தி மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை திருவண்ணாமலை (நெடுஞ்சாலை) கட்டு மானம் மற்றும் பராமரிப்பு வட்டம் கண்காணிப்புப் பொறியாளர் க.முரளி நேரில் சென்று பார்வையிட்டு கள ஆய்வு செய்தார். இந்த கள ஆய்வின்போது ஆற்காடு கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்ட உதவிக் கோட்டப் பொறியாளர் க.சரவணன் (நெடுஞ்சாலை), ஆற்காடு கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பொறியாளர் ச.வடிவேல் (நெடுஞ்சாலை) உட்கோட்ட பிரிவு உதவிப் ஒப்பந்ததாரர் மற்றும் களப்பணியாளர்கள் உடனிருந்தனர். சாலை மேம்பாட்டு பணிகளை விரைவில் முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர கண்காணிப்புப் பொறியாளர் அறிவுரை வழங்கினார்.
Next Story