பாரதி நகர் தேவி கருமாரியம்மன் கோயிலில் ஊஞ்சல் சேவை உற்சவம்.

பாரதி நகர் ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் கோயிலில் ஆடித்திருவிழா மற்றும் தீமிதி திருவிழாவை முன்னிட்டு இரவு ஊஞ்சல் சேவை உற்சவம் நடைபெற்றது
காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பாரதி நகர் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் 29 ஆம் ஆண்டு கூழ் வார்த்தல் திருவிழாவும், 25 ஆம் ஆண்டு தீமிதி திருவிழாவும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. தீமிதி திருவிழாவில் ஒரு பகுதியாக இரவு ஊஞ்சல் சேவை உற்சவம் நடைபெற்றது. இதில் சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் கோயில் வளாகத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் மணிமங்கலம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.
Next Story