இடுகாட்டிற்கு பாதை அமைக்க கோரிக்கை

X
குமரி மாவட்டம் தாழக்குடி இரட்சண்ய சேனை சமுதாயம் குடும்பத்தினருக்குச் சொந்தமான இடுகாடு, நாச்சியார் புதுக்குளத்திற்கு எதிரே உள்ள வயல்வெளி பகுதியில் அமைந்துள்ளது. இந்த இடுகாட்டுக்கு செல்லும் பாதை மிகவும் சிரமமான நிலையில் உள்ளதால், அப்பகுதி மக்கள் அவதியடைந்து வருகின்றனர். நேற்று ஒருவரின் இறப்பையொட்டி, உடலை அந்த இடுகாட்டுக்கு தூக்கிச் செல்ல மிகுந்த சிரமம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எனவே, தாழக்குடி இடுகாட்டுக்கு வசதியான பாதை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

