கரூர் - விளையாட்டு வீரர் மாரியப்பன் தங்கவேலு-வை கௌரவித்த செந்தில் பாலாஜி.
கரூர் - விளையாட்டு வீரர் மாரியப்பன் தங்கவேலு-வை கௌரவித்த செந்தில் பாலாஜி. கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் இன்று மாநில அளவிலான தடகள போட்டிகள் துவக்க விழா வேலம்மாள் பள்ளி மாணவ-மாணவியர் பாடிய இறைப்பாடலுடன் துவங்கியது. பள்ளியின் முதல்வர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார். இதனைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் இந்தியாவிற்காக பல்வேறு சர்வதேச விளையாட்டுகளில் போட்டியிட்டு தங்கம் வெள்ளி உள்ளிட்ட பல்வேறு பதக்கங்களையும்,மத்திய மாநில அரசுகளின் விருதுகளை பெற்று பெருமை சேர்த்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு - வை கௌரவிக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
Next Story




