காமக்காப்பட்டியில் டூவீலர் மீது கார் மோதி முதியவர் உயிரிழப்பு.
காமக்காப்பட்டியில் டூவீலர் மீது கார் மோதி முதியவர் உயிரிழப்பு. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா விள்ளப்பம் பட்டி அருகே உள்ள வடக்கு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துராஜ் வயது 63. இவர் ஜூலை 18ஆம் தேதி காலை 8.1 மணி அளவில் திண்டுக்கல் கரூர் சாலையில் அவரது டூவீலரில் சென்றார். இவரது வாகனம் காமக்கபட்டி அருகே சென்றபோது, அதே சாலையில் ராமநாதபுரம் மாவட்டம் பேராவூர் பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் வயது 35 என்பவர் வேகமாக ஓட்டி வந்த கார் முத்துராஜ் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் தலையில் பலத்த காயமடைந்த முத்துராஜ் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். சம்பவம் அறிந்த முத்துராஜ் மனைவி வளர்மதி வயது 52 அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்றகாவல்துறையினர் , உயிரிழந்த முத்துராஜின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து , இது தொடர்பாக விபத்து ஏற்படுத்திய ராஜசேகர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.
Next Story




