ஆடி வெள்ளியை முன்னிட்டு அங்காளம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

ஆடி வெள்ளியை முன்னிட்டு அங்காளம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
X
பக்திப் பரவசம் அடைந்த பல்லடம் ஆடி வெள்ளி அன்று அங்காளம்மன் கோவிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பெண்கள் பல்வேறு பகுதிகளிலும் பெண்கள் ஊர்வலம் மற்றும் கோவில்களில் வழிபாடு
திருப்பூர் மாவட்டம் பல்லடம் உலகப் பிரசித்தி பெற்ற கேட்டை நட்சத்திர பரிகார ஸ்தலமாக விளங்கக்கூடிய அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில் பல்லடம் பெண்கள் மிகுந்த பாசம் கொண்ட அம்மன் கோவில் ஆகும்.கோவிலில் ஆடி முதல் வெள்ளியை தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக அலங்கார மகாதீபாராதனைகள் காண்பிக்கப்பட்டு மக்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதற்காக சிறப்பு பூஜைகள் நடைபெற்றது, அதனை தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது அதனை பொதுமக்கள் நெடுந்தூரமாக வரிசையில் நின்று அம்மன் பிரசாதத்தை அன்னதானமாக சாப்பிட்டு சென்றனர், ஆடி வெள்ளியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பெண்கள் பக்தி பரவசத்துடன் அங்காளம்மன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு அம்மன் கோவில்களிலும் சுவாமி தரிசனம் செய்து வருவது இன்றைய நாளை பக்தி பரவசமாக பல்லடமே உள்ளது, என்பது குறிப்பிடத்தக்கது,அதன் ஒரு பகுதியாக சின்னூர் வருவாய் நகர் பகுதியிலுள்ள முத்துமாரியம்மன் திருக்கோவிலில் வேப்பமரத்தில் ஆளான சுயம்பு அம்மனுக்கு இப்பகுதியை சேர்ந்த பெண்கள் ஏராளமானோர் பொள்ளாச்சி சாலையில் உள்ள விநாயகர் கோவிலில் அக்னி சட்டி முளைப்பாரி கலச தீர்த்தம் எடுத்து ஊர்வலமாக வந்து சிறப்பு பூஜையிலும் ஈடுபட்டனர், அப்போது அருள் வந்து ஏராளமான பெண்கள் சாலையில் கலசத்துடன் நடந்து சென்றது பரவசத்தை ஏற்படுத்தியது.
Next Story