ராமநாதபுரம் எடப்பாடி பழனிச்சாமி வருகை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

ஒரு லட்சம் பேர் திரண்டு எடப்பாடி பழனிச்சாமி வரவேற்க வேண்டும் மாவட்ட செயலாளர் முனியசாமி அதிமுக ஊழியர்கள் கூட்டத்தில் பேச்சு
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் பட்டணமா தான் இசிஆர் மஹாலில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு மண்டபம் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஆர் ஜி மருது பாண்டியன் தலைமை வகித்தார் அதிமுக மாவட்ட கழக செயலாளர் எம் ஏ முனியசாமி சிறப்பு உரையாற்றினார் அப்போது பேசுகையில் முன்னாள் முதலமைச்சர் அதிமுக கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி யார் வரும் 30 31 ஆகிய தேதிகளில் ராமநாதபுரத்தில் சிறப்புரை ஆற்ற உள்ளார் மாவட்டத்தில் உள்ள அனைத்து அதிமுக தொண்டர்கள் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் அனைத்து சார்பாக அணிகள் நிர்வாகிகள் உள்ளிட்டோர் சுமார் ஒரு லட்சம் பேர் எடப்பாடியாரை வரவேற்க வேண்டும் மண்டபம் மேற்கு ஒன்றிய கழகம் சார்பில் 10,000 க்கும் மேற்பட்டோர் பங்கு கொள்ள வேண்டும் கழகத்தின் மூவர்ண கொடியிட ஏந்தி அனைத்து பகுதிகளிலும் ஆரவாரம் செய்து வரவேற்க வேண்டும் வரும் 2026 தேர்தலில் எடப்பாடி யார் தமிழக முதல்வராக வருவதற்கு அனைத்து தரப்பு பொதுமக்களும் ஆதரவு தர உள்ளனர் 200க்கும் மேற்பட்ட இடங்களில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம் திருவாடனை பரமக்குடி முதுகுளத்தூர் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளையும் கைப்பற்றும் என்று தெரிவித்தார் சாத்தூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் பேசுகையில் மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர் ஜி மருது பாண்டியன் போன்று அனைத்து அதிமுக நிர்வாகிகளும் எழுச்சியோடும் தீவிரமாக செயலாற்றினால் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக கைப்பற்றி மீண்டும் எடப்பாடி யார் முதலமைச்சர் ஆவது உறுதி அனைத்து கிராம பொது மக்களையும் அதிமுக நிர்வாகிகளையும் நேரில் சந்தித்து கட்சி பணிகளை தீவிர படுத்த வேண்டும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை ராமநாதபுரம் மாவட்டம் சார்பில் எழுச்சியோடு கும்பம் மரியாதையோடு சிறப்பாக வரவேற்பு கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார் முன்னாள் வாரிய தலைவர் முனியசாமி , அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ஆர் ஜி ரத்தினம் வழக்கறிஞர் பிரிவு மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் கருணாகரன் கலைப்பிரிவு மாவட்ட செயலாளர் ராமநாதன் வாலாந்தரவை ஜெயபால், மொட்டையன் வலசை கோபால் மண்டபம் மேற்கு ஒன்றிய ஜெ. பேரவை செயலாளர் ஜெகன், ராஜா, வினோத் செந்தமிழ்ச்செல்வன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் ரகுபதி கார்த்திக், தினகரன் சண்முகம் அலெக்ஸ் குணசேகரன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்
Next Story