உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் அமைச்சர் ஆய்வு

X
தாராபுரத்தை அடுத்த கோவிந்தாபுரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பொட்டிக்காம்பாளையம் மற்றும் பொன்னாபுரம் ஆகிய இரண்டு ஊராட்சிகளில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் மனித வள மேலாண்மைதுறை அமைச்சர் கயல்விழி கலந்து கொண்டு முகாமை ஆய்வு செய்தார். அங்கிருந்த பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் செல்வராஜ், தாராபுரம் ஊராட்சி ஒன்றிய குழு முன்னாள் தலைவரும், தாராபுரம் மேற்கு ஒன்றிய செயலாளருமான எஸ்.வி.செந்தில்குமார், ஊராட்சி ஒன்றிய குழு முன்னாள் துணைத் தலைவர் இ.சசிகுமார், மாவட்ட பிரதிநிதி பி.நந் தகுமார், ஆர்.டி.ஓ. நேர்முக உதவியாளர் சைலஜா, தாராபுரம் தாசில்தார் திரவியம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசுத் துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story

