குலதெய்வ கோவிலில் இருந்து திரும்பிய பெண் லாரி மோதி உயிரிழப்பு – சூலூரில் சோக சம்பவம் !

இருசக்கர வாகனத்தில் வந்த பெண் லாரி மோதி உயிரிழப்பு.
கோவை அப்பநாயக்கன்பட்டி புதூரைச் சேர்ந்த இந்திரா காந்தி (வயது 60), வெள்ளிக்கிழமைகளில் கோவில்களுக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். நேற்று காலை சின்னமேட்டுப்பாளையம் குலதெய்வ கோவிலுக்கு சென்று, பூஜை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். முத்து கவுண்டன்புதூர் ரயில்வே மேம்பாலத்தில் ஏறிக்கொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரி அவர் வாகனத்தில் மோதியது. இந்திரா காந்தி தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சூலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story