மாசாணி அம்மன் கோவிலில் பச்சை கிளி அமர்ந்த அதிசயம்!

X
கோவை, சூலூர் அருகேயுள்ள இருகூர் மாசாணி அம்மன் கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமை அன்று நடந்த அதிசய நிகழ்வு பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. 100 ஆண்டு பழமையான கோவிலில், சிறப்பு அலங்காரத்துடன் அம்மன் ஊஞ்சலில் எழுந்தருளியபோது, ஒரு பச்சை கிளி பறந்து வந்து அம்மன் மடியில் மற்றும் தோளில் அமர்ந்தது. பூஜைகள் நடைபெறும் நேரத்திலும் கிளி அச்சமின்றி அமர்ந்திருந்த அதிசய காட்சியைக் கண்ட பக்தர்கள், அதை கடவுளின் அருளாக கருதி பக்தியுடன் தரிசனம் செய்தனர். இது மிகவும் அரிய தரிசனம். இதைப் பார்த்த மக்கள் வேண்டியவை நிறைவேறும் என்று பக்தர் தனலட்சுமி தெரிவித்தார்.
Next Story

