பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவர் மீது வழக்கு

X
குமரி மாவட்டம் தக்கலை அருகே மருதூர்குறிச்சி பகுதியை சேர்ந்த 18 வயது இளம்பெண் சம்பவ தினம் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார் (32) என்பவர் இளம் பெண்ணின் வீட்டில் அத்து மீறி நுழைந்து ஆபாசமாக பேசி பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றார். உடனடி இளம்பெண் சத்தம் போடவே தப்பி ஓடி விட்டார். இது குறித்து இளம்பெண்ணின் பெற்றோர் தக்கலை போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விஜயகுமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

