அருமனை : இளம் பெண் மாயம்

அருமனை : இளம் பெண் மாயம்
X
போலீசில் புகார்
குமரி மாவட்டம்  இடைக்கோடு அருகே மலமாரி என்ற இடத்தை சேர்ந்தவர் கிறிஸ்டியன் ஆல்பர்ட்.  இவர் தனியார் மருத்துவமனையில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மகள் அபிஷா (20) மேல்புறம் பகுதியில் உள்ள ஒரு ரத்தப் பரிசோதனை நிலையத்தில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த தினம் காலையில் வழக்கம்போல் வேலைக்கு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றம் அடைந்த தந்தை, மகளை பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால் அன்று இரவு திடீரென்று மகள் தந்தைக்கு போன் செய்து தான் ஒருவரை திருமணம் செய்து கொண்டதாக கூறியுள்ளார். இது குறித்து கிறிஸ்டியன் ஆல்பர்ட  அருமனை காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.
Next Story