நாய், பூனைகள் மர்ம மரணம் – மேட்டுப்பாளையம் அருகே போலீசார் விசாரணை

நாய், பூனைகள் மர்ம மரணம் – மேட்டுப்பாளையம் அருகே போலீசார் விசாரணை
X
மேட்டுப்பாளையம் அருகே உக்கான் நகர் பகுதியில் 5 நாய்களும் 2 பூனைகளும் மர்மமாக இறந்த நிலையில் கிடந்தது பகுதியை கலங்க வைத்தது.
மேட்டுப்பாளையம் அருகே உக்கான் நகர் பகுதியில் 5 நாய்களும் 2 பூனைகளும் மர்மமாக இறந்த நிலையில் கிடந்தது பகுதியை கலங்க வைத்தது. இதுகுறித்து பொதுமக்கள் புகார் அளித்ததை அடுத்து, மேட்டுப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த்குமார் பார்வையிட்டார். மரணமடைந்த விலங்குகள் பிரேத பரிசோதனைக்காக இலுப்பபாளையம் கால்நடை ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டன. விஷம் வைத்து கொல்லப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நிலையில், கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டனின் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story