அரசுக் கல்லூரி பேராசிரியர்களுக்கான கண் பரிசோதனை முகாம்..

அரசுக் கல்லூரி பேராசிரியர்களுக்கான கண் பரிசோதனை முகாம்..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஆண்டகளூர்கேட் பகுதியில் உள்ள திருவள்ளுவர் அரசுக் கலை அறிவியல் கல்லூரி இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் கல்லூரிப் பேராசிரியர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. டாக்டர் அகல்வால் கண் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற இம்முகாம் தொடக்க விழாவில் கல்லூரி முதல்வர் (பொ) முனைவர் ஆர்.சிவக்குமார் தலைமை வகித்தார். கல்லூரி இளைஞர் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் இரா.ரம்யாமகேஸ்வரி முன்னிலை வகித்தார். இதில் 60-க்கும் மேற்பட்ட போராசிரியர்கள் பங்கேற்று கண் பரிசோதனை மேற்கொண்டனர்.
Next Story