அதிமுக சார்பில் திண்ணை பிரச்சாரம், எம்எல்ஏ பங்கேற்பு

X
செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம்,அம்மா பேரவை சார்பாக மதுராந்தகம் தெற்கு ஒன்றியம், நல்லூர் கிராமத்தில் விடியா திமுக அரசின் அவலங்களை எடுத்துரைக்கும் திண்ணை பிரச்சாரம் மதுராந்தகம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் V.கார்த்திகேயன் அவர்களின் ஏற்பாட்டில் இன்று 19.07.2025 நடைபெற்றது... இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயளாலர் திருக்கழுக்குன்றம் S.ஆறுமுகம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் கலந்து கொண்டு நல்லூர் கிராமத்தில் வீடு வீடாக துண்டு பிரசுரங்களை வழங்கி விடிய திமுக அரசின் அவலங்களை எடுத்துரைத்தார். இந்நிகழ்வின் போது,செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அம்மா பேரவை கழக செயலாளர் ஆனூர் V.பக்தவச்சலம், மதுராந்தகம் ஒன்றிய குழு பெருந்தலைவர்K.கீதா கார்த்திகேயன், ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள், ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் அணி சார்பு நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகள் உடனிருந்தனர்..
Next Story

