அருப்புக்கோட்டை புறவழிச்சாலை அமைக்கப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என்.ஓ.சுக்புத்ரா., அவர்கள் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அருப்புக்கோட்டை புறவழிச்சாலை அமைக்கப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என்.ஓ.சுக்புத்ரா., அவர்கள்   சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
X
அருப்புக்கோட்டை புறவழிச்சாலை அமைக்கப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என்.ஓ.சுக்புத்ரா., அவர்கள் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் ரூ.154.98 கோடி மதிப்பில் அருப்புக்கோட்டை புறவழிச்சாலை அமைக்கப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என்.ஓ.சுக்புத்ரா., அவர்கள் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: தமிழக அரசின் வழிகாட்டுதல் படி, மாவட்டத்தில் சாலை வசதிகளை மேம்படுத்துவதற்காவும், விரிவுபடுத்துவதற்காவும், சாலை பாதுகாப்பினை உறுதிபடுத்துவதற்கும் பல்வேறு சாலைப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அருப்புக்கோட்டை நகருக்கு மேற்கு புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் மற்றும் இரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகளுக்கு ரூ.119.58 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்தப் பணிகளில் 22 பெட்டிப்பாலங்களும், சிறுபாலங்களும், 10 சிறுபாலங்களும், 3 சாலை சந்திப்புகளையும், மேலும் 1 இரயில்வே மேம்பாலம் மானாமதுரை - விருதுநகர் இரயில்வே வழித்தடத்தின் குறுக்கிலும் உள்ளடக்கியுள்ளது. தற்போது இப்புறவழிச்சாலையில் மொத்தம் உள்ள 22 பெட்டிப்பாலங்களும் 10 சிறுபாலங்களும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. சாலை பணிகளில் மொத்தமுள்ள 9.905 கி.மீ - தூரத்தில் 7.98 கி.மீ சாலைப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மேலும், இரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. மேலும், அருப்புக்கோட்டை புறவழிச்சாலை அமைப்பதற்கு நில எடுப்பு பணிக்கு மட்டும் ரூ.35.40 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் புறவழிச்சாலை பணிகள் முடிவடையும் பட்சத்தில் போக்குவரத்து நெரிசலுள்ள மற்றும் குறுகலான, வாகன நெரிசல் உள்ள அருப்புக்கோட்டை நகர பகுதியினை தவிர்த்து சிரமமின்றி பயணிக்க ஏதுவாக இப்புறவழிச்சாலை அமையும் என தெரிவித்தார் அதனை தொடர்ந்து, அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பதிவேடுகள், கோப்புகள், பெறப்பட்டுள்ள மனுக்கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டு, நிலுவையில் உள்ள மனுக்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களை விரைந்து பரிசீலனை செய்து தீர்வு வழங்க தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார். பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் நடைபெற்ற தூய்மைப் பணிகளை (Mass Cleaning) மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அரசு அலுவலகங்களை சுற்றிலும் சுகாதாரமாகவும், தூய்மையாகவும் வைத்து கொள்ள வேண்டும் என அரசு அலுவலர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.
Next Story